நல்ல சேதி வந்திடுமா!
நல்ல சேதி நோக்கி நிற்கும்
நமதருமைத் தோழர்களுக்கு!
வாழ்ந்த வாழ்வின் நோக்கங்கள்
வசப்படும் செய்தி காத்திருக்கு!
நமது கடமை நன்றாய் உழைப்பது!
நமது உரிமை போராடிப் பெறுவது!
எத்துனைக் கஷ்டம் எழுந்து வரினும்
துச்சமாய் அவற்றை தாங்கிக் கடப்பது!!
இந்தத் தன்மை இப்போது
பெரும்பான்மை பெற்றுவிட்டது.
சிறுபான்மையாளர்களே!- அது
சிறுபிள்ளைத் தனம் உணருங்கள்!
அனைத்துச் சங்க ஒற்றுமைக்குள்
அடங்காத சங்கம் உண்டு!
அடங்க மறுத்த மாநிலம் உண்டு.
நம்ப மறுத்த தோழனும் உண்டு!
அவர்களை நீங்கள் சீண்ட வேண்டாம்.
அதுவே அவர்களை ஆட்டிப் படைக்கும்.
எதிர்காலப் போராட்டங்களில்
அவர்கள் தலைமை கூடத் தாங்கலாம்.
போராடிய அனைவருமே
புரிந்து, தெளிந்து போராடவில்லை.
தலைமையை நம்பியதால்
அவர்களுக்கு தடுமாற்றம் ஏதுமில்லை.
பணக் கஷ்டம் எங்கும் உண்டு - அதற்காய்
பரிதவிக்கும் தோழனும் உண்டு.
அவனே இன்று எழுந்துவிட்டான்!
உனக்கென்ன கஷ்டம் உணர்வாய் தோழா!
ஒவ்வொரு சிக்கலையும்
முக்கலையும், முனகலையும்
தலைவன்தான் முடிக்கணுமா!
நாம் எதற்கு இருக்கின்றோம்!
சிரத்தை எடுத்து தீர்த்திடு தோழா!
வரலாற்றுச் சிறப்பு மிக்க
தலைவர்கள் வாழ்ந்த பூமி!
குப்தாவும், ஜெகனும் போல்
எத்தனையோ தலைவர்கள்
களமமைத்து சென்றிட்டார்கள்!
அவர்களின் வழி செல்வோம்!
அனைத்தையும் வெல்லுவோம்!!
வாருங்கள் தோழர்களே!
No comments:
Post a Comment