பகுத்தறிவுப் பகலவனை பிரிந்த நாள். 24-12-1973
டிசம்பர் 24. இன்று, தந்தை பெரியாரின் 44 வது நினைவு நாள்.
தமிழ்நாட்டின் சிந்தனை முறையை மாற்றியதில் பெரியாருக்கு மிகப்
பெரியபங்குண்டு. சாதிய, பெண்ணிய , மதவாத கருத்துகளின் அடிப்படைகளை எதிர்த்து துணிவோடு கேள்விகளை எழுப்பியவர்.
நவீன இந்தியாவின்
உயிர்ப்புள்ள மாற்றுச் சிந்தனையாளர். ஜாதி ஒழிப்புச் செயல்பாடுகளில்
ஈடுபட நினைக்கிறவர்களுக்கு, பெரியாரே மிகச் சிறந்த வழிகாட்டி. பவுத்தத்தை அம்பேத்கர் சமயமாக அறிவித்தார். பெரியார் தன் பகுத்தறிவு பார்வையில் வாழும் வழிமுறையாக
எடுத்துரைத்தார்.
பெரியார் ஒரு லெஜெண்ட். அம்பேத்கர்
ஒரு லெஜெண்ட். பெரியாரும் அம்பேத்கரும் மார்க்ஸூம் பேசியது மானுட விடுதலையை நோக்கியது. அதை எடுத்துக் கொண்டே
நாம் ஒட வேண்டும். ஆனால்,
அதற்குப் பதிலாக நம்மை அடையாளம் காட்டிக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறோம். இந்தத் தலைவர்களின் கருத்துகளை மக்களுக்குக் கொண்டுசென்று சேர்க்காமல், புரொஃபைல் படங்களிலும், சட்டைகளிலும், பேனர்களிலும் அவர்களது புகைப்படத்தை வைத்துக் கொள்வதைப் பெரிய விஷயமாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நாம் செய்ய வேண்டியது
அவர்களுடைய கொள்கைகளைப் பரப்புவதே!
No comments:
Post a Comment